விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் விருதுடன், 5 லட்சரூபாய்; அமைச்சர்.!
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், அங்கக விவசாய முறைகளைப் பின்பற்றி, அதில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு மற்றும் அதனை பிரபலப்படுத்தும் சிறந்த விவசாயிகளுக்கு, வேளாண் துறையில் சிறந்து விளங்கிய நம்மாழ்வார் அவர்கள் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த விருதுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.