4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே என அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
சமீப நாட்களாக தமிழக பாஜக தலைவரின் 5 லட்சம் வாட்ச் குறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார். 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம். கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா. 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ். 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச். இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய். ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே, என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.