விபத்தில் இறந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு..!

Published by
murugan

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சமும், விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் இன்று (10.6.2021) அதிகாலை வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருமதி ஜெயலட்சுமி என்பவர் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார் அவருடன் அவரது மாமியார் திருமதி செல்வி, நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோரும் உடன் வந்த போது கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் ஏரி அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் திருமதி ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு வரும் வழியிலும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சம்பவ இடத்திலேயும் இறந்துவிட்டனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் திருமதி ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாயும், அவருடன் உயிரிழந்த அவரது மாமியார் திருமதி செல்வி மற்றும் நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அதோடு விபத்தில் உயிரிழந்த இம்மூவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப்பயன்களைப் பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

3 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

3 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

4 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

6 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

6 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

7 hours ago