போர்வெல் மூலம் 5 துளைகள்..!மீண்டும் ரிக் இயந்திரம் பணியை தொடங்கியது ..!
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 71 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் கடினமான பாறைகள் உள்ளதால் துளையிடும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.
ரிக் இயந்திரத்தின் மூலம் பாறைகள் உடைக்க முடியாத நிலையில் போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது போர்வெல் பணிகள் முடிந்தது. பாறையை துளையிட்டு இருந்தால் ரிக் இயந்திரம் மூலம் எளிதாக குழி தோண்ட முடியும் என தெரிகிறது.
இந்நிலையில் போர்வெல் இயந்திரம் மூலம் பாறையில் மொத்தமாக ஐந்து துளைகள் போடப்பட்டு உள்ளது.அதில் ஒரு துளை 40 அடியும் மற்ற துளைகள் 15 அடி ஆழத்திற்கும் துளையிடப் பட்டுள்ளது.மேலும் குழந்தையின் மேல் உள்ள மணலை உறிஞ்சி எடுக்கும் முயற்சியும் மேற்கொள்ள உள்ளனர்.மீண்டும் ரிக் இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியது.