10 கோடி ரூபாய் தங்கம் கடத்தல்.! புதுக்கோட்டை கடல் பகுதியில் கைதான 5 மீனவர்கள்.!
சென்னை : புதுக்கோட்டை கடல் வழியாக ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் கடத்தபட்டதாக 5 மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்க கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ தங்கம் சிக்கியது.
புதுக்கோட்டை மாவட்ட கடல்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியதாகவும், இதில் தொடர்புடைய 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.