நாமக்கல்லில் 5 காசுகள் உயர்ந்த முட்டை விலை!
நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 3.65 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் முட்டையிலும் அந்த வைரஸ் தாக்கம் காணப்படும் என வதந்திகள் கிளம்பியதால் முட்டையின் விலை மிகவும் கடுமையாக சரிந்ததுடன், வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 5 காசுகள் அதிகரித்து, 3.65 காசுக்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே முட்டைக்கு விலை ஏறி இறங்கி காணப்படுகிறது.