5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்-தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி,தென்காசி,ராணிப்பேட்,திருப்பத்தூர்,செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். , ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.