தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று, நாளை தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும்
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50
கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 10,11 ஆகிய தேதிகளில் மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு
வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40
முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில்
வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…