ஊரடங்கு உத்தரவால் ரூ.100-க்கு 5 கோழிகள் விற்பனை!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு இதனை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, மக்கள் வெளியே செல்ல இயலாத நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருள்களின் வரத்தும் குறைவாக தான் உள்ளது. இதனையடுத்து, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோழிப்பண்ணைக்கு தீவன வரத்து குறைந்துள்ளதால், 5 கோழிகள் ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கோழிப்பண்ணைக்கு மட்டுமே நாள்தோறும் 10 மூட்டை தீவனங்கள் தேவைப்படுகிற நிலையில், ஊரடங்கு காரணமாக நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகளில் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.