ஆன்லைன் மூலம் சென்னையில் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது!

சட்டவிரோதமாக சென்னையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள பல இடங்களில் தங்கம் லாட்டரி என்ற பெயரில் போலந்து அரசு பரிசு தொகை தருவதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளிவந்த நபர்களே மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் சாத்தாங்காடு கார்கில் நகரில் உள்ள ராசிரங்கா, முருகானந்தம் செல்வம் உள்ளிட்ட 5 பேர் ஆன்லைன் மூலம் லாட்டரி விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்ததாக கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.