கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது அரசு விதிகளின்படி 56 பேராசிரியர்களாக நியமிக்கப்படவில்லை. அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த 56 பேரும் அரசின் விதிகளின்படி கல்வித்தகுதி குறைவாக இருந்தவர்கள் என கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
எனவே இந்த 56 போரையும் பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைகழக துணைவேந்தர் அவர்கள் கூறுகையில், அரசு விதிகளின்படி அவர்கள் இல்லாதா காரணத்தால் அவர்களை பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஒரே நேரத்தில் 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது, பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…