ரூ.6000 நிவாரணம்.! ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்.!

Chennai flood Relief - Tamilnadu CM MK Stalin

மிக்ஜாம் புயல் புயல் – கனமழையால் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இன்னும் வெகு சில இடங்களில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது.

கனமழை பாதிப்பு.! ரேஷன் கார்டுக்கு ரூ.6000 நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் நிவாரண உதவிதொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருந்தது.

ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர் அருகில் உள்ள ரேஷன் கடையில் விண்ணப்பம் பெற்று நிரப்ப வேண்டும். அதன் பிறகு அரசு ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து நிவாரண தொகை அளிப்பார்கள் என கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, சென்னையில் வசிப்போர் இதுவரை 4.9 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் , திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும் என மொத்தமாக 5.5 லட்சம் பேர் ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்