மழை காரணமாக இன்று மட்டும் 5மாவட்டங்களில் விடுமுறை !
தமிழகத்தில் மலையின் தாண்டவம் தொடகியுள்ள நிலையில்
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 7 தாலூகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்கட்டுள்ளது. விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடியை தவிர்த்து மற்ற தாலூகாக்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்ததுள்ளார்.