5 வயது சிறுமி….காட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல்….போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அதே பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை காட்டுக்குத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை தேடிய பெற்றோர், காட்டுப்பகுதியில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நாகராஜை போலீசார் தேடி வந்தனர். இதன் பின்னர் பெரியகுளம் தென்கரையில் உள்ள விடுதியில் தலைமறைவான நாகராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com