5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் ,சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களை விட மெட்ரோ ரயில்களில் 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்களின் பாதிக்கப்படுவதாக சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் ஆதிக்கத்தை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவையை, இந்திய ரயில்வே ஏற்று நடத்த உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.