5 நாள் விடுமுறை..!முடங்கிய வங்கி சேவை..!தவிக்கும் மக்கள்..!
5 நாள் வங்கி சேவை முடங்கி உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்று, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 நாள், வங்கி சேவை முடங்கி உள்ளதால், மக்கள் தவித்து வருகின்றனர்.