மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

Published by
பாலா கலியமூர்த்தி

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5ம் தேதியுடன் தோ்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரம்ஜான் பண்டிகையையொட்டி 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனிடையே, 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மற்ற தேர்வுகள் நடைபெற்று முடிவு பெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை 9 நாட்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்கள் மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் தள்ளிப்போன தேர்வெழுத பள்ளிக்கு வரவேண்டும்.

அதன்பின் அந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதாவது, மக்களவை தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் 2 மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாரவிடுமுறை, மற்றும் தேர்தல் விடுமுறை தவிர்த்து மற்ற நாட்கள் பள்ளிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent Posts

பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

52 minutes ago
கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…

2 hours ago
இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!

இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!

நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…

3 hours ago

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…

5 hours ago

ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…

5 hours ago

சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…

6 hours ago