ttf vasan [Image source : Livelaw]
டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
டிடிஎப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் வாசன் அதி வேகத்தில் சென்றதால் விபத்து நடந்தாக கூறப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து, போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விபத்தில் தான் காயமடைந்துள்ளதால் சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் வாசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், டிடிஎப் வாசனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொர்ந்து, அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு முன் மூன்று முறை டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…