சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த மாணவி தான் அனிதா. சிறுவயதிலேயே தனது தாயை இழந்த இவர் அவரது தந்தையான சண்முகத்தின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கிய அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்தார்.
இந்த நிலையில், அனிதாவின் கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால் அனிதாவுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆனால் அவர் நீட் தேர்வு எழுதிய அனிதாவால், 76 மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ஜிப்மர் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதன் காரணமாக மனமுடைந்த அனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவிற்கு இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்! தங்கையின் நினைவைச் சுமந்து, கல்வியுரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…