ஓட்டு போட 4 ஆம்னி பேருந்துகளில் வாக்காளர்கள்! போலீஸ் விசாரணை!
தமிழகத்தில் இன்று, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு 300 மீட்டருக்கு அப்பால்தான் எந்த கட்சி வாகனமும் கட்சி பிரமுகர்களும் இருக்க வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அவரது தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு 300 மீட்டருக்கு அப்பால் இருந்தனர். இவர்களை போலீசார் விசாரித்து அங்கிருந்து கலைந்து போகச் சொன்னார்கள். அதற்கு திமுக ஆதரவாளர்கள் நாங்கள் 300 மீட்டருக்கு அப்பால்தான் இருக்கின்றோம் என கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.
இந்நிலையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி அண்ணா நகரில் ஓட்டு போட வாக்காளர்கள் நான்கு ஆம்னி பேருந்துகளில் வந்து இறங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். வாக்காளர்களை போலீசார் ஓட்டு போட விடாமல் அலைக்கழிப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்
DINASUVADU