திருப்பூர்:மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது
இந்நிலையில்,திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது.அதைப்போல கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும்,பவானி,புளியங்குடி,அதிராம்பட்டினம்,போடிநாயக்கனூர் ஆகிய நகராட்சிகளுக்கான துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்,கீரமங்கலம்,சேத்தூர்,ஐம்பை,கூத்தைப்பார்,ஊத்துக்குழி,மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் சிபிஐ-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும்,வத்திராயிருப்பு, பூதப்பாண்டி,சிவகிரி,புலியூர் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகளும் சிபிஐ-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…