நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
அதன்படி,அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில்,தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,400 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி,நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்,அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை மாநில தேர்தல் ஆணையர் பழநிகுமார் கேட்டறியவுள்ளார்.
இதற்கிடையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.