வீட்டு வேலை செய்து படித்த மாணவி +2 தேர்வில் 492 மதிப்பெண்!
வீட்டு வேலை செய்து கொண்டே +2 தேர்வு எழுதிய சென்னை கூவம் நதிக்கரை சேர்ந்த குடிசை வாழ் மாணவி 492 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள கூவம் நதிக்கரையின் ஓரத்தில் உள்ள குடிசையில் வாழ்ந்து வந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி தான் கீர்த்தனா.இவரது குடும்பம் முழுவதையும் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு அரசாங்கம் 2 வருடத்திற்கு முன் குடியேற்றி உள்ளது. அப்பொழுது அவர் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இடம் மாற்றம் காரணமாக அதிக வீட்டுக் கஷ்டம் ஏற்பட்டதால் வீட்டு வேலைகளை ஓவர் டைம் ஆக பார்த்துக்கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். நேற்று வெளியாகிய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் 492 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாங்கள் வைத்துள்ள மளிகை கடையில் தனது நேரத்தை அதிகளவு செலவிட்டு இருந்தாலும் இரவு வந்து சமையலும் அவர்தான் செய்ய வேண்டியிருக்குமாம். காலையில் ஐந்து மணிக்கு, இரவு நேரத்தில் ஒன்பது மணி வரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அதிக மார்க் எடுத்து இருக்கிறேன் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.