இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதினார்கள்.அந்த கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறை தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்தது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேச துரோக வழக்கு’ என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.
இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…