அதிக கட்டணம் வசூலித்ததாக 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விடுமுறை காலம் வந்தாலே, தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்து விடும். அதையும் மீறி ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து தான் வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் விடுமுறைக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சென்னையில் கோயம்பேடு, போரூர் ஆகிய பகுதிகளில் போக்குவாரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கடந்த 23ஆம் தேதி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வரை பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, ஆவணங்களை புதுப்பிக்காமல் வைத்திருப்பது உள்ளிட்ட புகார்களின் அடிப்படியையில் 49ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில் அதிக கட்டணம் செலுத்திய பயணிகளுக்கு 9,200 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது. இன்னும் விடுமுறை இருப்பதால், வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை தொடரும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…