என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் -கமல்ஹாசன்
என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதினார்கள்.அந்த கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறை தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
The Prime minister seeks a harmonius India. His statements in the parliament confirms it. Should not the state and it’s law follow it in letter and spirit? 49 of my peers have been accused, of sedition, contradicting the PM’s aspirations. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 8, 2019
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை விரும்புகிறார், மாநிலங்களும், சட்டமும் அதை பின்பற்ற வேண்டாமா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.