அதிமுக 48ஆம் ஆண்டு தொடக்க விழா ! முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் மரியாதை
அதிமுகவின் 48-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்கள்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் இன்று ஆகும்.இன்றோடு அதிமுகவிற்கு 48 ஆண்டுகள் ஆகின்றது.இதன் துவக்க விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிச்சாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்கள்.