ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் கேடு..! சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார் – அண்ணாமலை

Default Image

ஆர்.எஸ்.பாரதியின் இந்த அறிக்கையை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் கேடு விதித்து அண்ணாமலை அறிக்கை

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ஆம் தேதி அன்று `DMK Files’ என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி , உதயநிதி உட்பட பல தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தி.மு.க-வின் சொத்து பட்டியல் என சில தரவுகளை வெளியிட்டார். அதோடு தனது ரபேல் வாட்ச் பில்லையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை 

RSBharati

இந்த நிலையில்,  தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு நோடீஸ் அனுப்பி இருந்தார். அதில், இந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்டு, 48 மணி நேரத்தில் 500 கோடி ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும் என்றும், DMK files என்ற தலைப்பில்‌ சுமார்‌ 15 நிமிடங்கள்‌ ஓடும்‌ வீடியோவில்‌ நீங்கள்‌ தி.மு.க கட்சிமீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக்‌ கூறியிருந்தீர்கள்‌ என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், தலைவர்‌ ஸ்டாலின்‌ சார்பாக நான்‌ கூறிக்கொள்வது, உங்கள்‌ பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்‌. உங்கள்‌ சமூக ஊடகப்‌ பக்கங்கள்‌ மற்றும்‌ இணையதளத்தில்‌ வீடியோவை நீக்க வேண்டும்‌. இழப்பீட்டுத்‌ தொகையாக ரூ.500,00,00,000 (ரூபாய்‌ ஐந்நூறு கோடி மட்டும்‌) எங்கள்‌ கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும்‌. எங்கள்‌ கட்சிக்காரர்‌ தமிழ்நாடு முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்‌. இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள்‌ இவற்றைச்‌ செய்யத் தவறினால்‌, உங்களுக்கு எதிராகப்‌ பொருத்தமான சிவில்‌ மற்றும்‌ கிரிமினல்‌ வழக்கு தொடங்குவதற்கு எங்கள்‌ கட்சிக்காரர்‌ முன்வருவார்‌ என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை அறிக்கை 

annamalai 12

ஆர்.எஸ்.பாரதியின் இந்த அறிக்கையை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் கேடு விதித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எதிர் கொள்ள நான் தயார்.

திமுகவினருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ள போது, மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதும் பாஜக மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் ஆர்எஸ் பாரதி விளக்கம் தர வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்படும்.

ஆர்.எஸ்.பாரதியின் சட்ட அறிக்கைக்கு விரைவில் பதில் வரும்,  புகாருக்கு இழப்பீடு கூறும் சட்ட அறிக்கையும் விரைவில் வரும். ஆருத்ரா நிறுவனத்தில் நான் ரூ.84 கோடி பெற்றதாக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூபாய் 500 கோடியை ஒரு ரூபாய் இழப்பீடு தர வேண்டும். இழப்பீடு தொகையை பி.எம் கேருக்கு செலுத்த விரும்புவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்