48 மணி நேரம் தா டைம்..!அக்கார்டு உடனே காலி செய்யணும்..! உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி..!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விடுதிகள் அண்மையில் மூடி சீல்வைக்கப்பட்டன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில், வனப்பகுதியின் உள்ளே 230 ஏக்கர் பரப்பில் இயங்கிவரும் சொகுசு விடுதியை மூடி சீல்வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவாலா கிராமத்தில் 180.8 ஏக்கர் மற்றும் 49.9 ஏக்கர் வன நிலத்தில் இந்த சொகுசு விடுதி அமைந்துள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி அக்கார்டு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சொகுசு விடுதி செயல்படும் நிலத்தை காலி செய்து 48 மணி நேரத்தில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அக்கார்டு அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி சுப்பிரமணியம், சம்மந்தப்பட்ட வனநிலத்தில் அமைந்துள்ள பங்களாக்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மற்றும் அனைத்து கட்டுமானங்களையும் 48 மணி நேரத்தில் மூடி சீல்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
DINASUVADU