சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-வது புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று தொடங்கி உள்ள 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 வரையும், வேலை நாட்களில் 2 முதல் 8.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.
தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்
புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 47-ஆவது சென்னை புத்தக கண்காட்சியையொட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உரைநடை – பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கவிதை – உமா மஹேஸ்வரி, நாவல் – தமிழ்மகன், சிறுகதை – அழகிய பெரியவன், நாடகம் – வேலு.சரவணன் மற்றும் மொழிபெயர்ப்பு – மயிலை பாலுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர் உதயநிதி, முதல்முறையாக ஒரு பதிப்பாளராக புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உள்ளேன். வாசிப்பு பழக்கம் என்பது ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதன் அடையாளமாகும். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் தர துணை நிற்கும் புத்தகங்களை போற்றுகின்ற அரசாக ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என்றார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…