புனேவில் இருந்து 4,78,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது…!
புனேவில் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை அடுத்து, தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புனேவில் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இதுவரை தமிழகத்திற்கு, மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1,69,26,880 கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. தற்போது வந்துள்ள தடுப்பூசிகள், தடுப்பூசி தேவை உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.