தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4,59,055 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 4 லட்சத்து 59 ஆயிரத்து 055 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 761 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 312 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரத்து 279 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…