#Breaking : இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் இரு நாட்கள் வெளியூர் செல்வதற்கு தனியார் மற்றும் அரசு பேருந்துக்கு அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னையில் இருந்து இன்றும், நாளையும் அரசு சார்பில் 1500 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்கள் இடையே 3000 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.