அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு : தவெக, நாதக உட்பட 45 கட்சிகளின் விவரம் இதோ…

வரும் மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெக, நாதக, பாஜக என 45 பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TVK Vijay - Seeman - Annamalai

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதாவது, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தீவிரமாக ஈடுபட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது மறுசீரமைப்பு செய்தால் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், ஒருவேளை தொகுதி எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய 22 தொகுதிகளுக்கு பதிலாக 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

இதனை குறிப்பிட்டு நேற்று, அடுத்தமாதம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். இதுபற்றி கலந்து ஆலோசிக்க தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வருடம் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் அதனை செயல்படுத்தும் முனைப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் :

  1. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  2. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  3. இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ்)
  4. பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
  6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M)
  7. விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக)
  8. பாட்டாளி மக்கள் கட்சி (பாமக)
  9. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  10. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக)
  11. தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
  12. மனிதநேய மக்கள் கட்சி
  13. தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக)
  14. தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)
  15. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)
  16. மக்கள் நீதி மய்யம் (மநீம)
  17. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)
  18. நாம் தமிழர் கட்சி (நாதக)
  19. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
  20. அகில இந்திய பார்வர்டு பிளாக்
  21. ஆதி தமிழர் பேரவை
  22. முக்குலத்தோர் புலிப்படை
  23. மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  24. மக்கள் விடுதலை கட்சி
  25. புதிய தமிழகம்
  26. புரட்சி பாரதம் கட்சி
  27. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
  28. புதிய நீதிக் கட்சி
  29. இந்திய ஜனநாயகக் கட்சி
  30. மனிதநேய ஜனநாயகக் கட்சி
  31. இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
  32. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
  33. பெருந்தலைவர் மக்கள் கட்சி
  34. அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
  35. பசும்பொன் தேசிய கழகம்
  36. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
  37. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
  38. கலப்பை மக்கள் இயக்கம்
  39. பகுஜன் சமாஜ் கட்சி
  40. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
  41. ஆம் ஆத்மி கட்சி
  42. சமதா கட்சி
  43. தமிழ்ப்புலிகள் கட்சி
  44. கொங்கு இளைஞர் பேரவை
  45. இந்திய குடியரசு கட்சி

இந்த அனைத்துக்கட்சி கூட்டமானது வரும் மார்ச் 5ஆம் தேதியன்று, காலை 10 மணியாவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்