44வது செஸ் ஒலிம்பியாட்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு

Default Image

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியானது நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது!

சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும், மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. இவற்றைக் கண்டு தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்.

செஸ் ஒலிம்பியாடையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும், விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன், மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்