தமிழகத்தில் இன்று 44 பேர் உயிரிழப்பு.., 10,941 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 3,347 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,172 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 9,14,119 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,11,590 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,12,99,220 ஆக உள்ளது. மேலும், தற்போது 75,116 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025