கடந்த 44 நாட்களாக தண்ணீரை குடித்து உறங்கினேன்.! மதுபிரியரின் ஏக்கம் கலந்த கவலை.!
கடந்த 44 நாட்களாக மது கிடைக்காமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து, தினமும் பச்சை தண்ணீரை கண்ணீருடன் குடித்து உறங்கி வந்ததாக கோவை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த நாகராஜ் என்கிற முதியவர் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளளது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் படி பலவேறு மாநிலங்களில் கடந்த திங்கள் கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று வயது வாரியாக குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாட்டுக்குள் மது வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 10 மணி முதல் 1 மணி வரையிலும் 1 மணி முதல் 3 மணி வரையில் 40 முதல் 50 வயதினரும், 3 மணிக்கு மேல் 40 வயதிற்கு உட்பட்டவர்களும் மது வாங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 44 நாட்களாக மது கிடைக்காமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து, தினமும் பச்சை தண்ணீரை கண்ணீருடன் குடித்து உறங்கி வந்ததாக கோவை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த நாகராஜ் என்கிற முதியவர் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், 44 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கும் செய்தி அறிந்தவுடன் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கடைக்கு வந்துவிட்டதாக அம்முதியவர் தெரிவித்தார்.