மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு சீல்.!

Default Image

பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி 43 கடைகளை உரிமையாளர்கள் திறந்துள்ளன. இதனையடுத்து திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு  மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது என தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்