WeatherUpdate [File Image]
நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 43% குறைவாக பெய்துள்ளது என இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. நடப்பாண்டில் 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், தற்போது வரை 98 மி.மீ. மழை பெய்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும், வங்கக் கடல் மற்றும் இலங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் வேகமெடுக்கும். நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 43% குறைவாக பெய்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தற்போதைக்கு, மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. தமிழகத்தின் திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…