தமிழகத்திற்கு ஜூலை 2-ம் தேதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வருகை..!
- அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கையை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
- தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன.
தமிழகத்தில் பற்றாக்குறை என்பது கடந்த சில மாதத்திற்கு முன்பாக ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு போதுமான தடுப்புப்பூசிகளை தமிழகத்தில் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் அளவை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன. இதில் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு என 13 லட்சத்து 43 ஆயிரத்து 380 கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 560 கோவாக்சின் தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 74 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு வர உள்ளது.
44 வயது மேற்பட்டவர்களுக்கு 21 லட்சத்து 55 ஆயிரத்து 180 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 லட்சத்து 29 ஆயிரத்து 200 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஆக மொத்தம் 25 லட்சத்தை 84 ஆயிரத்து 380 தடுப்பூசிகளும் வர உள்ளது.