42 படகுகளை மட்டுமே விடுவித்தது இலங்கை நீதிமன்றம்:தமிழக மீனவர்கள் அவதி!!!
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015 நவம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் பிடித்து வைத்துள்ள 42 படகுகளை விடுக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் படகுகள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படகுகள் ஆகும்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை காரணங்களாக காட்டி இலங்கை கடற்படை படகுகளை சிறைபிடித்து வைத்திருந்தது.
இந்த நிலையில், ‘இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த 42 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 153 படகுகள் இலங்கை வசமுள்ள நிலையில் தற்போது 42 படகுகளை மட்டும் விடுவித்துள்ளது