ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக தமிழக அரசு சுமார் ரூ.300 கோடி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வரும் 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, 41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுப்பு செய்யப்படும் என்றும் இனி பல்கலைக்கழகங்களுக்கு பதில் கல்லூரிக் கல்வி இயக்ககமே ஊதியம் & இதர செலவினங்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் முடிவை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை – அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும், அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலை.களே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தேன். அந்த குறை சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு சுமார் ரூ.300 கோடி வழங்க வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 41 அரசு கல்லூரிகளுக்கும் 2248 உதவிப் பேராசிரியர், 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றையும், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…