தமிழகத்தில் இன்று 404 பேர் உயிரிழப்பு.., 34,867பேருக்கு கொரோனா..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,867 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 34,867 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 81 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 1,899 பேருக்கும், கோவையில் 4,277 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 27,026 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 15,54,759 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,68,194 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,64,69,766 ஆக உள்ளது. மேலும், தற்போது 3,01,580 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)