4,000 துணை பேராசிரியர்கள் – அரசாணை வெளியீடு!
4,000 கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரி பேராசிரியர்கள் இட மாற்றம் தொடர்பான கலந்தாய்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 4,000 துணை பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும். 3,000 காலி பணியிடங்களுக்கு 5,408 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இதுவரை 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட பொறியியல் படிப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் 4வது சுற்று கலந்தாய்வு நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது எனவும் கூறினார்.