அரசு பேருந்துகளை ஓட்ட 400 தற்காலிக ஓட்டுநர்கள் – போக்குவரத்துத்துறை திட்டம்!
சென்னை, நாகை, கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்துறை திட்டம்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் அடிப்படையில் 400 தற்காலிக ஓட்டுநர்களை நியமனம் செய்ய போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது. ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 400 ஓட்டுநர்களையும் நியமிக்க போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருச்சி, நாகை, கும்பகோணம், மதுரை, கோவை வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 பணிமனைகளில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
ஓசூர், தூத்துக்குடி வழித்தடங்களிலும் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்த போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஒப்பந்த ஓட்டுநர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.