Today’s Live: தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு ஒய்+ பிரிவு பாதுகாப்பு..!
ஒய்+ பிரிவு பாதுகாப்பு:
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு அகில இந்திய அடிப்படையில் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு:
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்னர். ரயில்கள் பெட்டிகள் வீசி எறியப்பட்டத்தில், உயரத்தில் செல்கிற மின்சார கம்பிகள் அறுந்து, பெட்டிகளில் விழுந்துள்ளது. 40 பேரது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால், அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என, விபத்து தொடர்பாக விசாரிக்கும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.
அரசு பேருந்துகளிலும் இனி முன்பதிவு செய்யலாம்:
அரசு விரைவு பேருந்துகளில் உள்ளது போல, மாநிலத்தில் 200 கி.மீ. தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும், முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து இனி பயணிக்கலாம், Tnstc.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்:
தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வரும் 17ம் தேதி சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கவுள்ளார் நடிகர் விஜய். நீலாங்கரையில் உள்ள RK Convention Centre-ல் இந்த விழா நடைபெறும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவிதுள்ளார்.