சென்னை ரயிலில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம்.. வைர நகைகள் பறிமுதல்.!

Default Image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் இருந்து 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  

ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணிகளிடம் இன்று ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கம் போல சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோபால் என்ற பயணியிடம் சோதனை செய்ததில் அவரது உடமைகளில்இருந்து 40 லட்சம் அளவில் ஹவாலா பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் பறிமுதல் செய்ப்பட்டன.

ஆனால், இதற்கான உரிய ஆவணம் கோபாலிடம் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்