திருமணமாகி 40 நாட்களேயான பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.!

Published by
Ragi

திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் கிறிஸ்டி திரும்பி வராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் சென்ற பார்த்த உறவினர்கள் கிறிஸ்டியை அரை நிர்வாணமாக ஆற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாகவும், அவர் 5 சவரன் நகை காணாமல் போயுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெண்ணின் கணவர் அவரை பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொல்ல முயன்றதாக பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து போலீசார் கணவர் அருள்சாமியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் உள்ள காரணத்தால் வேறு யாராவது பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 40 நாட்களிலே புதுமண பெண் கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

13 minutes ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

58 minutes ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

2 hours ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

2 hours ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

3 hours ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

4 hours ago