மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் தேங்கிய 40 கோடி நோட்டுகள்!

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் 40 கோடி மதிப்பிலான நோட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் 100 கோடி மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் கூட 70 சதவீதம்நோட்டுகள் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் மார்ச் மாதம் தொடங்கி பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இதனால் தயாரிக்கப்பட்டு வந்த 40 கோடி மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இது குறித்து ஒரு நோட்டு பத்தியாளர் ஜெயக்குமார் கூறுகையில், கொரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் தயாரித்த நோட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம். நோட்டு தயாரிப்பாளர்கள் அனைவருமே பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதுவரை 40 கோடி மதிப்பிலான நோட்டுக்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன என கூறிய அவர், தமிழக அரசு இதற்கான உரிய நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.