40 சவரன் நகை திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!
40 சவரன் நகை திருச்சி மாவட்டம் துறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாமிநாதன் நகரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரது குடும்பத்தினர் திருமணத்துக்கு ஜவுளி வாங்குவதற்காக நேற்றிரவு திருச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டுச் சுவரை ஏறிக் குதித்து காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் துரத்திய நம்பிராஜனை அவர்கள் இடித்துத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர், நம்பிராஜனின் வீட்டு பீரோவில் இருந்து 40 சவரன் நகையும் 35 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.